×

த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!

 

மதுரையில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் நேற்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து வைத்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது.  

இந்நிலையில் மதுரை கோர்ப்பாளையத்த்ல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.