×

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மறைவு - சீமான் இரங்கல்!

 

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற - இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது, தோல்விகளால் சோர்ந்துவிடாது, தம்முடைய கடும் உழைப்பாலும் அயாராத முயற்சியாலும் மதுரா டிராவல்ஸ் எனும் மிகப்பெரிய வாடகை வாகன நிறுவனத்தை உருவாக்கிய தொழிற்துறை முன்னோடி! ஐயா பாலன் அவர்கள் தமிழ்நாட்டில் முதன்முதலாக 24/7  வாகன சேவையை  உருவாக்கிய சாதனையாளர். வாழ்வில் சாதிக்க  துடிக்கும் தமிழிளம் தலைமுறையினருக்கு தம்முடைய அனுபவங்களையே பாடங்களாக கற்பித்து  ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி ஆகச்சிறந்த வழிகாட்டியாய் திகழ்ந்தவர்!