×

"உலக வெற்றிக் கழகம் என ஏன் பெயர் வைக்கவில்லை? - விஜய்க்கு சீமான் கேள்வி

 

உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள விஜய் உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். அவரது கொள்கை, கோட்பாடுகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், வரவேற்பும் விமர்சனங்களும் தெரிவித்தனர். மேலும் திராவிடமும், தமிழ்தேசியமும் தனது இரு கண்கள் என விஜய் கூறினார். விஜயின் இந்த அறிவிப்பை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார். லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் என கடுமயாக விமர்சித்தார். 

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது, உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள விஜய் உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தது ஏன்? என கூறினார். தான் மிகப்பெரிய கூட்டணி வைத்திருக்கிறேன் எனவும், 8 கோடி மக்களோடுதான் என் கூட்டணி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.