×

ஓலா பைக் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை..!!

 

பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையத்தில் உள்ள OLA இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஓலா பைக் அடிக்கடி பழுதாகி பாதி வழியிலேயே நிற்பதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில் பல முறை சர்விஸ் செய்தும் பழுது சரியானதாக தெரியவில்லை .

இதன்காரணமாக கோபத்தின் உச்சிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஓலா பைக் விற்பனை நிறுவனத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று பழுது பார்த்தாலும் மீண்டும் பழுது ஆகிக்கொண்டே இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் .

உழைத்த காசு கொடுத்து பைக் வாங்கினால் நிம்மதியா ஓட்ட முடியவில்லை என கூறி OLA பைக் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.