×

13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை

 

சென்னை போரூரில் 13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 74 வயதான சிவகுமார் என்ற முதியவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். மகன்கள் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், சிவகுமார் 70 வயதான மனைவி கோதையுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில், முதியவர் சிவகுமார் 13வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகுமார் உண்மையிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை போரூடில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.