×

தொடர் விடுமுறை- கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள்

 

3 நாள் விடுமுறை எதிரொலியாக கட்டண கொள்ளையில் தனியார் ஆம்னி பேருந்துகள் ஈடுபட்டுள்ளன.

சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் இதை சாதகமாக்கி  கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முன்று மடங்கு உயர்த்தி உள்ளனர்.

இன்று இரவு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம்  1900 முதல் அதிகபட்சம் 4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து  கோயம்புத்தூர் செல்வதற்கு குறைந்தபட்சம் கட்டணம் 2000 முதல் அதிகபட்சம் 4,500 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து  நாகர்கோயில் செல்ல - 2500 முதல் 4500 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு குறைந்தபட்சம் 2000 முதல் 4200 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் 1515 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.இந்நிலையில் விடுமுறையை சாதகமாகக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டண விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளனர்.