ஓணம் பண்டிகை - அண்ணாமலை வாழ்த்து
Aug 29, 2023, 10:34 IST
ஓணம் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்குமான நல்லாட்சி புரிந்த மகாபலி மன்னரும், அவரை வருடம் ஒரு முறை தன் மக்களைக் காண அருளிய வாமனக் கடவுளும், அனைத்து மக்களுக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்களும், நலன்களும் வழங்க மனமார வேண்டிக் கொள்கிறேன்.