மேலும் ஒரு நாதக மாவட்ட நிர்வாகி விலகல்! விஜய் கட்சியில் சேரப்போவதாக தகவல்
மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.
சேலம் மாநகரின் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் வைரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து வைரம் தனது முகநூல் பக்கத்தில், “ நாம் தமிழர் கட்சியின் "வீரத்தமிழர் முன்னணியின் " சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் ஆகிய நான் இன்று முதல் கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்.என்றும் தலைவரின் வழியில் தமிழ்தேசிய பாதையில் தொடர்வேன்” எனக் குறிப்பிட்டுள்ள்ர்.
நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் நேற்று விலகிய நிலையில், நாதகவில் இருந்து விலகியோர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுவதால் சீமான் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.