×

நா.த.க., வில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

 

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தியடைந்த சில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் மாவட்ட செயலாளர்கள் குற்றம்சாட்டினர். விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளராக செஞ்சி பகுதியை சேர்ந்த சுகுமார், நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினர்.

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார். கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றச்சாட்டாகும்.