×

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு- ஓபிஎஸ்

 

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அவலம் தான் நிலவுகிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேட்டியளித்த ஓ.பி.எஸ்-ஸிடம் நடிகர் விஜய்-ன் கோட் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே நகர்ந்து சென்றார். 
  
பின்னர் முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சரின் பயணத்தால்  தமிழக மக்கள்  பயனடைந்தால் வரவேற்புக்குரியது.  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். மேலும் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின்  நிதி போதியளவு இருக்கிறது. தமிழகத்திற்கு குறைந்த அளவு நிதி ஏதும் ஒதுக்கவில்லை எனக் கூறினார்.

 ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அவலம் தான் நிலவுகிறது. கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார்.