×


தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது: நிர்மலா சீதாராமன்

 

திமுக அரசு மக்களின், உரிமைகளை காக்கத் தவறுகிறது என்று நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டியுள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.அயோத்தி கோயில் திறப்பு விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ராமர் கோயில் திறப்புவிழாவை ஒளிபரப்புவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட எல்இடி திரைகளை அகற்றியது, பக்தர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலாகும்; திமுக அரசு மக்களின், உரிமைகளை காக்கத் தவறுகிறது; விருப்பங்களை நசுக்குகிறது. இந்து எதிர்ப்பு திமுக, பிரதமர் மீதான வெறுப்புணர்வை காட்டுவதாக எக்ஸ் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.  அத்துடன் ராமர் கோயில் குடமுழுக்கை காண காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்ட எல்இடி திரையை அகற்றி, தமிழ்நாடு காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது; கோயில்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்படுகிறது  என்று காஞ்சிபுரம் கோயிலில் வழிபாடு நடத்த சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டியுள்ளார். ராமர் கோயில் குடமுழுக்கால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.