×

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் தாக்குதல் - மத்திய அரசுக்கு ஓபிஎஸ்  கடிதம்

.
 

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய அரசுக்கு ஓபிஎஸ்  கடிதம் எழுதியுள்ளார்.

இதுக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரியத் தொழிலான மீன்பிடித் தொழிலைத் தொடரும் போது, ​​இலங்கை கடற்படையினரால் / மர்மநபர்களால் கடத்தப்படுவதும், அவர்களைப் பயமுறுத்துவது  தொடர்பாக உங்கள் கவனத்திற்கு நான் பலமுறை கடிதம் எழுதியது நினைவிருக்கலாம். இந்திய கடல் பகுதியில் 22-07-2023 அன்று ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பதினைந்து மீனவர்கள் இலங்கையிலிருந்து வந்ததாகக் கூறப்படும் கடற்கொள்ளையர் கும்பலால் இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களைப் பற்றி இப்போது உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

 நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஜிபிஎஸ், வாக்கி-டாக்கி, மீன்பிடி வலைகள் போன்ற உபகரணங்களைப் பறித்துச் சென்றனர். தமிழக மீனவர் சமூகம் மிகுந்த கொந்தளிப்பான மனநிலையில் உள்ளது, மேலும் இந்திய அரசின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து  எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உடனடி தலையீடு மற்றும் பதிலைக் கோருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.