×

ஹீரோ வில்லனிடம் அடிவாங்குவான்...ஆனால், கடைசியில் வில்லன் நிலை..?-வைத்திலிங்கம் கருத்து!

 

அதிமுக வழக்கில் தொடர் பின்னடைவை சந்தித்து வருவது தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அளித்துள்ள பதில், வைரலாகி வருகிறாது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்து அதிமுக கட்சி கொடி அகற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் உள்ள அதிமுக கட்சி கொடி அகற்றப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அதிமுக பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளம் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்ப்பார்ப்பதாக கூறினார். தொடர்ச்சியாக வழக்கில் பின்னடைவை சந்திப்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், திரைப்படங்களில் முதலில் ஹீரோ வில்லனிடம் அடிவாங்குவான்.. ஆனால் ஒரே அடியில் வில்லன் கீழே விழுவான். இதே நிலைமை தான் வரும். இவ்வாறு கூறினார்.