×

‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குனர் காலமானார்..! 

 

ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுரேஷ் சங்கையா. 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தைத் தொடர்ந்து பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ள 'சத்திய சோதனை' படத்தை இயக்கியுள்ளார் சுரேஷ் சங்கையா. 

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான், சத்திய சோதனை. ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கொலையினை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலைய காவலர்கள் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை நகைச்சுவை கலந்து சொன்ன படம் தான், சத்திய சோதனை. இப்படமும் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டது. இப்படி, தனது இரண்டு படங்கள் மூலம், தனித்துவமான இயக்குநராக இருந்த சுரேஷ் சங்கையா கல்லீரல் செயலிழப்பால் சற்றுமுன் காலமானார்.

இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்