×

“தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணுக”... திருமதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு பா.ரஞ்சித் வாழ்த்து

 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்துவந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், அடுத்த மாநிலத் தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடன் 2006 ம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றியவர். மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டுள்ளார்.