×

2026 தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும்- பா.ரஞ்சித்

 

சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் சமூகப்பணி குறித்து கவிஞர் முத்துகிருஷ்ணன் எழுதிய காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்னும் நூலின்  வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆம்ஸ்ட்ராங் தலைமை தாங்கினார்.மாநில தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். நூலினை பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் வெளியிட இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன்,திரைப்பட இயக்குனர்கள் பா.ரஞ்சித்,வெற்றி மாறன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், “இரண்டு விஷயங்கள், எந்த அரசியல் சலுகைகளை கொண்டு யாரும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருந்து தப்ப கூடாது, அரசியலில் நமது பங்கு என்ன ? அதில் முக்கியமான கடமை ஒன்று திருமதி. ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி தோல்வி பெரிது அல்ல, சண்டை செய்ய வேண்டும். எங்களை மிரட்ட முடியாது, எதை கொண்டும் வாங்க முடியாது. சட்டமன்ற தேர்தலில் திருமதி.ஆம்ஸ்ட்ராங்கை வெற்றி பெற வைக்க வேண்டும், அவர் சம்மதிக்கா விட்டாலும் பராவாயில்லை. இன்னும் சண்டை செய்ய தயாராக வேண்டும். யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள், நம்மால் ஏன் ஆக முடியாது?


இந்தியாவில் மூன்று சதவீதம் மட்டுமே உள்ளவர்கள் நாட்டை ஆளும் போது நாம் ஏன் ஆள முடியாது? என்னுடைய கனவில் நேற்று ஆம்ஸ்ட்ராங் வந்தார். அவருடன் பெரிய கூட்டம் இருந்தது. அவரை துரத்தி வந்தனர். திமுக அரசை பற்றி எந்த வன்மம் வந்து விட கூடாது என எழுதியவர்களுக்கு இந்த புத்தகத்தை கொடுக்க வேண்டும். அவர் அமைதியாக  என்னவெல்லாம் மிகப்பெரிய விஷயங்களை செய்துள்ளார். அவரை கொன்ற போது பலர் அமைதியாக இருந்தனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலையில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் அக்கவுண்டல் மிகப்பெரிய தொகை வந்துள்ளது, ஆகையால் நமது வழக்கறிஞர்கள்  கவனமாக பார்க்க வேண்டும். வழக்கில் மறு விசாரணை தேவை, வழக்கில் சம்பந்தப்பட்ட  யாரும் விட்டு விட கூடாது, ஏன் சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டார்?. இவர் கொலைக்கு தேவைப்பட்டவரா என்ற சந்தேகம் உள்ளது. இதனை இங்குள்ள காவல் துறை பதில் சொல்ல வேண்டும். இது எங்களது உரிமையாகும். சில சந்தேகமான விஷயங்கள் எல்லோரும் இருக்கு, இதனை சாதாரணமாக விட்டு விட கூடாது. இது ரவுடிகளுக்கு ஏற்பட்ட சண்டை என தெரிவிக்கின்றனர். 

2018ல் மயிலை சிவக்குமாரிடம் பாம் வாங்கியதாக உள்ளது. இங்கு உள்ள உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இது திமுக அல்லது அதிமுக எந்த அரசாங்கமாக இருந்தாலும் கேள்வி கேட்போம். இதற்கு நாம் பயப்பட கூடாது. இது ரவுடி கும்பல்களின் மோதல் இல்லை. இதற்கு திருமதி ஆம்ஸ்ட்ராங், ஆனந்தன் உள்ளிட்டோர் காவல் துறை அறிக்கையை கவனமாக பார்க்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தல் அரசியலோடு இதனை பார்க்க வேண்டும், இது ஆம்ஸ்ட்ராங் ஆற்றலாக மாற்ற வேண்டும், திருமதி ஆம்ஸ்ட்ராங் திருவள்ளூர் தொகுதியில் நிற்க வைத்து திட்டுமிட்டு வெற்றி பெற இப்போதே வேலை செய்ய வேண்டும். ஏற்கனவே தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு உண்டு. ஆம்ஸ்ட்ராங் யார் என்று கேட்வர்களுக்கு பதிலாக சொல்ல வேண்டும். அதற்கு நான் வேலை செய்ய தயாராக உள்ளேன்” என்றார்.