×

பல்லடத்தில் பரபரப்பு- டாஸ்மாக் கடைகள் மூடல்

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் முன்பு மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் மது அருந்தியுள்ளனர். இதனை செந்தில் ராஜ் தட்டிக்கேட்ட நிலையில், அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முற்பட்ட போது செந்தில் ராஜின் தம்பி மோகன்ராஜ், அவரது தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.  வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முதலில் உடல்களை பெற ஒப்புதல் தெரிவித்த உறவினர்கள், தற்போது மறுப்பு தெரிவித்துள்ளனர். உடல்களை வாங்க வேண்டாம் என உறவினர்களிடம் பாஜகவினர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பாஜகவினர் மறியல் காரணமாக வளாகத்தின் வெளிப்புற கதவு பூட்ட​ப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலை ஒட்டி பல்லடம் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.