×

”தனுஷ்- நயன்தாரா இடையிலான கருத்து வேறுபாடு பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருக்கிறது"- பார்த்திபன்

 

புதுச்சேரியில் சினிமா பட சூட்டிங் நடத்த, ஒரு நாளைக்கு ரூபாய் 28 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்பொழுது 18 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதை போல் புதுச்சேரியில் சின்னத்திரை சூட்டிங் நடத்த ஒரு நாளைக்கு 18,000 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது பத்தாயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சினிமா பட சூட்டிங் கட்டணங்கள் குறைக்கப்பட்டதால் முதல்வர் ரங்கசாமியை, நடிகர் பார்த்திபன் சந்தித்தார் அப்போது நடிகர் பார்த்திபன், ரங்கசாமிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் நன்றி தெரிவித்தார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன், “விமர்சனங்கள் இல்லாமலும் சிறு படங்கள் நன்றாக ஓடி உள்ளது. படம் ஓடாத அப்போ, விமர்சனம் நன்றாக வந்து இருந்தால் படம் ஓடி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும்.  இரண்டு நாளைக்குள் ஒரு படத்தைப் பற்றி மோசமான விமர்சனங்கள் வரும் போது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விமர்சனம் காரணமாக படம் ஓட வேண்டும் என்றால், அது போன்ற படங்கள் ஓட வேண்டிய தேவையில்லை. பல கோடி ரூபாய் போட்டு எடுக்கின்ற படத்தை, ஒரே நிமிஷத்துல தூக்கி எறிந்து பேசுவது வருத்தமான விஷயம். எந்த தயார்ப்பையும் யாரும் எதுவும் பேச முடியாது.

தமிழக அரசியல் என்பது ஆரம்பித்தில் இருந்தே பேச்சு தான். பேச்சு மூலம் விஷயங்களை செயல்படுத்த விரும்புகிறோம். அண்ணாதுரை என்றாலும் சரி,  கலைஞர் என்றாலும் சரி, பேசி தான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். மிஸ்டர் விஜய் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார், அவர் ஒரு தவழும் குழந்தை மாதிரி. முன்பு பேசுவதற்கே பயப்படுவார். தற்போது தைரியமா பேச ஆரம்பித்திருக்கிறார், அது வாழ்த்து கூறிய விஷயம். மிஸ்டர் சீமான் ஆரம்பித்தில் இருந்தே ஓங்கிய பேச்சு தான், அவரின் செயல்பாடு. அதனால் இதுல சரி தப்புன்னு ஒரு ரூட் கிடையாது. யார் யாருக்கு எது சரியோ அது செய்து விட்டு போகலாம். வெளிநாட்டு அரசியல் இருப்பவன். இதுபோன்று பேசுவது கிடையாது. நம்ம ஊருக்கு பேச்சு சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனால் அதை வர வைக்க வரவேற்க வேண்டிய விஷயம் தான்.

நயன்தாரா- தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருக்கிறது. ஒரு பக்கம் தனுஷ், ஒரு பக்கம் நயன்தாரா. திருமணம் ஒன்றிற்கு வந்த அவர்கள், ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாம் பார்வையாளர்கள், அதனால் இரு தரப்பையும் நான் ரசிக்கிறேன்” என்றார்.