×

"சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார்"... உதயநிதியை சாடிய பவன் கல்யாண்

 

உங்களால் சனாதனத்தை அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.


திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், “சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது. சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார். அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார். சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது, ஆனால் நீங்கள் அழிந்து போவீர்கள்.


ராகுல் காந்தி எப்போதும் பகவான் ஸ்ரீ ராமரை அவமதித்து வருகிறார். ஆனாலும், அவர் இந்து வாக்குகளையும் விரும்புகிறார். நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன், ஸ்ரீ ராமரை பற்றி இழிவாக பேசும் உங்களுக்கு இந்துக்களின் ஓட்டு மட்டும் வேண்டுமா? திருப்பதி லட்டு குறித்து நடிகர் கார்த்தி எந்த தவறும் செய்யவில்லை அவருக்கு பின்னால் இருந்தவர்கள் தான் கேலியாய் சிரித்தார்கள் அதைத்தான் நான் கண்டித்தேன்” என்றார்.