×

மக்கள் ஷாக்..! மீண்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.. தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில்...

 

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ. 5 முதல் 20 வரை உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.