×

செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர் - அமைச்சர் உதயநிதி 
 

 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை செம்மொழிப் பூங்காவில் 10 நாட்களுக்கு நடைபெறும் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.  அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மலர் கண்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 28 வகையிலான 12 லட்சம் மலர் செடிகள் செம்மொழிப் பூங்கா முழுவதும் வைத்து அலங்கரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை மாநகரின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்  2010-ம் ஆண்டில் திறந்து வைத்தார்கள்.

மாநகரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ள பசுமைமிகு செம்மொழி பூங்காவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மலர்க்கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தோம். 

சிறப்பான முறையில் இந்த மலர்க்கண்காட்சியை வடிவமைத்துள்ள  வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் - அலுவலர்களுக்கு வாழ்த்துகள்.

செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர்! என்று குறிப்பிட்டுள்ளார்.