×

தை அமாவாசை- முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடும் மக்கள் 

 

அமாவாசை தினங்களுள் முக்கியமானது தை அமாவாசை. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு புண்ணிய நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று முக்கிய கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.ஓராண்டில் 96 முறை தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரம் சொன்னாலும், ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமானது. இன்றைய நாளில் தர்ப்பணம் செய்வது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றுப் படித்துறையில், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதேபோல் தை அமாவாசையை ஒட்டி குற்றால அருவியில் புனித நீராடி, மக்கள் வழிபாடு செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர்.