×

"எல்லாம் நேத்து சமைச்சது..”! பிரபல உணவகத்தில் சிக்கன் நூடுல்ஸ், பிரட் ஆம்லேட் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி

 

தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள மேரியோ ஜூஸி என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடையில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பிரட் ஆம்லெட் ஆகியவற்றை வாங்கி அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் உடனடியாக தாராபுரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் தெரிவித்தும் இரண்டு மணி நேரமாக வராததால் பரபரப்பு ஏற்பட்டது. 


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மேரியோ ஜூஸி என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடையில் தாராபுரம் மேற்கு பஜனைமட தெருவை சேர்ந்த ஆசாத் அலி என்பவர் தனது குடும்பத்துடன் சென்று சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பிரட் ஆம்லெட் ஆகியவற்றை வாங்கி அருந்தியுள்ளார். சாப்பிட்ட சில நிமிடத்தில் குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால் கடை ஊழியர்களிடம் கேட்டபொழுது, முறையான பதில் அளிக்கவில்லை. உடனே சமையல் கூடத்திற்கு சென்று குளிர்சாதனப் பெட்டியில் பார்த்த பொழுது துர்நாற்றம் வீசிய சிக்கன் மற்றும் அழுகிப்போன சிக்கன் இருந்தது தெரியவந்தது. 

உடனடியாக தாராபுரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டார் நீண்ட நேரமாக தொலைபேசியை எடுக்காததால் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான விஜயலலிதா அம்பிகையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நான் சென்னையில் உள்ளேன், தாராபுரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவார்கள் என தெரிவித்துவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தா ஆசாத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வராததால் நீண்ட நேரம் காத்திருந்து விட்ட கிளம்பிச் சென்று விட்டார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.