×

தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி., அலுவலகத்தில் மனு

 

தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய்,  கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும்  கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி   அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று, பின்னர்  இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்த கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அதனையடுத்து விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், கட்சி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே அனைவரும்  எதிர்பார்த்திருப்பது மாநில மாநாட்டிற்காகத்தான்.  அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

இந்நிலையில் செப். 23ல் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடத்த அனுமதிக்கோரி தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் இன்று காலை மனு அளித்தார். இதையடுத்து வி.சாலை கிராமத்தில் மாவட்ட ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி நேரில் ஆய்வு செய்தனர். இதேபோல் தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.