கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு
Apr 30, 2024, 12:25 IST
கோடை காலத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு சென்ற முதலமைச்சர் மதுரையிலிருந்து காரில் சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு சென்றார்.
இதனிடையே மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. மனுவுடன் கஞ்சா பொட்டலத்தையும் எடுத்து சென்றதால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பாஜக நிர்வாகி சங்கர் பாண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.