×

கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு- கைதானவர் "பகீர்" வாக்குமூலம்

 

சென்னை கொத்தவால் சாவடியில் சாமி கும்பிடிவதுபோல் சென்று ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் மூலஸ்தானத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து நடந்துவருவதாகவும், சட்டம், ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதாகவும் பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கொத்தவால் சாவடியில் சாமி கும்பிடிவதுபோல் சென்று ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் மூலஸ்தானத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். 4 அண்டுகளாக வழிபட்டும், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் போதையில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி எடுத்துவந்து தீப்பற்ற வைத்து வீசியதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் என்பதும் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் கோயிலில் இருந்த பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.