×

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 

நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயம் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இதனிடையே இந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூற முஸ்லீம் அமைப்புகள் மற்றும் சில கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரு சில திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் சிவகார்த்திகேயம் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.