×

மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

 

மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத், சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். பத்ரிநாத், பரோபகாரிகள் குழுவுடன் சேர்ந்து, 1978ஆம் ஆண்டில் சென்னையில் சங்கர நேத்ராலயா எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இலாப நோக்கற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். சராசரியாக, 1200 நோயாளிகள் மருத்துவமனை நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். 

ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.[9] சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. இந்த நிலையில், பத்ரிநாத் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.