×

வயநாடு மருத்துவமனையில் சிறுமியுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி..!

 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து செய்தார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக, பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு நேற்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு வந்தடைந்தார். அவரை கேரள ஆளுநரும், முதல்வரும் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேசினார் பிரதமர் . பின்னர் நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்தார். அப்போது சிறுமி ஒருவருடன் அவர் கொஞ்சி விளையாடினார். அவர்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்.