×


தேவரின் ஆன்மீக பாதை தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது - பிரதமர் மோடி புகழாரம்

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.