×

#PMK பரபரப்பான சூழ்நிலையில்  பாமக உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது...

 

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தொடங்கியது.

இதில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மற்ற உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து  மாவட்ட செயலாளர் கூட்டம்  நடைபெற உள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என தகவல்கள் வெளியாகின. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஆறு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 இந்நிலையில் இப்பொழுது கூடியுள்ள உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருகின்ற இருபதாம் தேதி அதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.