இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி எம்.எல்.ஏ
Nov 12, 2023, 13:10 IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்இன்பம் பெருகி மகிழ்ச்சி பொங்க, குடும்பம் நலமுடன் வாழ உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்தத் தீபாவளி திருநாள் முதல் தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகி மனச்சோர்வு அகன்று மகிழ்ச்சி பொங்க உடல் ஆரோக்கியம் உற்சாகம் நிலைக்க தீப ஒளிபோல் ஒளிமயமான வாழ்வு மலர தித்திக்கும் தீபாவளியாய் செழிக்கட்டும். அன்பெனும் அருங்குணம் பெருக்கெடுத்து அறநெறி வாழ்வியல் பண்பாடு செழித்து மனிதநேயம் சகோதர நல்லிணக்கம் வளர்ந்து சேவை நாட்டுப்பற்று நிலைத்து பணி சிறக்க நன்மைகள் பெருகி பொருளாதாரம் உயர்ந்து அமைதியும் வளர்ச்சியும் ஓங்கட்டும்.