×

வடதமிழகத்தில் வாக்கு வங்கியை  தக்க வைத்த பாமக

 

10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் பாமக வடதமிழகத்தில் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி , பாஜக கூட்டணி,  நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மண்ணை கவ்வின.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பத்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக  10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது  தர்மபுரி தொகுதியில் மட்டும் கடைசிவரை கடும் போட்டி நிலவியது. இருப்பினும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை தோற்கடித்து திமுக வேட்பாளர் ஆ,  மணி வெற்றி பெற்றார்.

 மக்களவைத் தேர்தலில் பத்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 18 லட்சத்து 89 ஆயிரத்து 689 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது 4.30 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 17 லட்சத்தில் 58,774 வாக்குகளை பெற்றது. அதாவது 3.8% வாக்குகளை பெற்றிருந்தது. வட தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை பாமக தக்க வைத்து வருகிறது.  அதன்படி இந்த தேர்தலிலும் பாமக தனது வாக்கு சதவீதத்தை வட தமிழகத்தை பொறுத்தவரை தக்கவைத்துள்ளது.