சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பி போலீசார் நடவடிக்கை!!
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் . சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளிக்க சென்றனர். முதல் முறை சம்மன் அனுப்பிய போது, சீமான் ஆஜராகவில்லை என்பதால் 2வது முறையாக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.