×

குளிரில் நடுங்கிய போதை இளைஞருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்த காவல்துறை..!

 

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குடிபோதையில் டைவ் அடித்து குளித்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக கருதப்படுகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் கவர்வது நட்சத்திர ஏரி. இந்த ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மற்றும் அதனை சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி செய்தல் வழக்கம் . இன்று மாலை 5 மணி அளவில் போதையில் மதுரையை சேர்ந்த கார்த்திக் என்னும் இளைஞர் நட்சத்திர ஏரியில் குதித்து குளிக்க தொடங்கியுள்ளார். இவர் குளிக்க முயன்றதில் அதிக போதையினால் நீச்சல் அடிக்க முடியாமல்  ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என கத்தி கொண்டே கரை சேரும் வீடியோ வைரலாய் வருகிறது. 

இதனால் நட்சத்திர ஏரிப் பகுதியில் பொதுமக்களிடம் சுற்றுலா பயணிகளையும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போதை ஆசாமியை அழைத்துச் சென்ற கொடைக்கானல் காவல்துறையினர், யாரு சாமி நீ?.. என விசாரணை நடத்தினர். அப்போது நானும் “மதுரைக்காரன்டா” என உளறினார். உடனே 
குளிரில் நடுங்கிய போதை இளைஞருக்கு டீ வாங்கிக்கொடுத்த காவல்துறையினர், தெளிய வைத்து ஊருக்கு அனுப்பிவைத்தனர்.