×

டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டம்?

 

டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்  காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.இ ந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கெனவே வாசனின் யூடியூப் சேனலை ஏன் முடக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். விதிகளை மீறியபடி வாகனம் ஓட்டிய வீடியோக்களை பார்த்து இளைஞர்கள் தடம் மாறுவதாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் அடிப்படையில் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.