×

“என்னை திருமதி ஆம்ஸ்ட்ராங் என்றே அழைக்க வேண்டும்”- பொற்கொடி

 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை நியமித்து பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்துவந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், அடுத்த மாநிலத் தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடன் 2006 ம் ஆண்டு முதல் இணைந்து பணியாற்றியவர். மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல், திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ஆம்ஸ்ட்ராங் மனைவி, ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இது போன்று மாற்றியதாக கூறியுள்ளார்.