×

மருத்துவர்கள் போராட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு

 

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், மருத்துவர்கள் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு  தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.  பிரேமலதாவுடன் தேமுதிக கட்சி நிர்வாகிகளும் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.