×

3 நாட்களாக சரியும் விலை.. தங்கம் வாங்க சரியான நேரம்..! 

 


சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.200 குறைந்துள்ளது. 

உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக விலையேற்றம் கண்டுவந்துள்ளதே நிதர்சனம். கடந்த வெள்ளிக்கிழமை (செப்.13) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம் சென்னையில்  தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் ,  ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

இதனைத்தொடர்ந்து  கடந்த திங்கள் கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.  தொடர்ந்து நேற்று முன்தினம் முன்னதாக அதிகரித்த அதே 120 ரூபாய்  குறைந்து ஒரு கிராம் ரூ. 6,865க்கும், ஒரு சவரன் 54,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,850க்கும் , ஒரு சவரன் ரூ. 54,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இந்த நிலையில் சென்னையில் 3வது நாளாக இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.  அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து  ஒரு கிராம் ரூ. 6,825க்கும், ஒரு சவரன் ரூ.54,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி 96 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.