×

பிரதமர் வருகை - திருச்சியில் ட்ரோன் பறக்க தடை

 

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜனவரி 19-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் சென்னையில் தொடங்கி வைக்கிறார். ஒன்றிய  அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.அண்மையில், டெல்லி சென்ற தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள  கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பிதழ் அளித்தார்.அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ம் தேதி  2 நாள் பயணமாக ஜனவரி 19-ம் தேதி சென்னைக்கு வருகிறார். ஜனவரி 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார். அடுத்த நாள், ஜனவரி 20-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதையடுத்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, டெல்லி செல்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (17.01.2024) முதல்  20 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.