×

"சிறையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் அவர் பாத்துப்பாரு"- கைதி வீடியோ கால்

 

கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கைதி ஒருவர் வீடியோ கால் மூலமாக நண்பர் ஒருவருடன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபி கச்சேரி மேடு பகுதியில் ஈரோடு மாவட்ட சிறை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகள், உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ கால் மூலமாக பேசவும் வசதிகள் உள்ளது. இதற்காக கைதியின் உறவினர்கள் இ-பிரிசன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு வரும் விண்ணப்பத்தை சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலித்து அனுமதி அளிப்பார்கள். அதன் பின்னர் கைதிகள், உறவினர்களுடன் 10 நிமிடங்கள் வீடியோ கால் மூலமாக பேசிக்கொள்ளலாம். இருவரும் பேசும் வீடியோ முழுவதும், சிறையில் உள்ள ரெக்கார்டரில் முழுமையாக பதிவாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த 23.7.2024 அன்று கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த வேலுச்சாமி மகன் கௌரிசங்கர்(25) என்பவர், கோவை மாவட்டம் சரவணம் பட்டி காமராஜபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் கவுதம்(30) என்பவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அந்த வீடியோ காலில், மாவட்ட சிறையில் முதன்மை தலைமை வார்டனாக உள்ள ராஜாராம் என்பவர் கைதிகளுக்கு உதவி செய்து வருவதாகவும், அவருக்கு கூகுல் பே மூலமாக பணம் அனுப்பி உள்ளதாகவும் கௌதம் பேசி உள்ளார். மேலும் 5 க்கும் மேற்பட்ட முறை ராஜாராமை கேட்டதாக கூறவும், என்றும், ராஜாராம் உதவி செய்வார் என்றும், அவருக்கு பணம் அனுப்பப்பட்ட ஸ்கிரீன் சாட்டை காண்பிப்பதாகவும் கவுதம் பேசி உள்ளார். 

அந்த வீடியோ கால் முழுவதும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணை கைதி கௌரிசங்கரும், கவுதமும் வீடியோ காலில் பேசிய 10 நிமிட வீடியோவில், 6 நிமிட வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறைத்துறையினரும், கோபி போலீசாரும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில்,சரவணம்பட்டியை சேர்ந்த கவுதம் மீது இதுவரை கோவை மாவட்டத்தில், ரத்தினபுரி, சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், கொலை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட காலகட்டத்தில், கவுதமிற்கு ஒத்துழைப்பு அளிக்காத சிறைத்துறை அதிகாரிகள், சிறை காவலர்களின் கூகுள் பே போன்ற செயலிகள் மூலமாக பணம் அனுப்புவதும், அந்த ஆதாரத்தை வைத்து சிறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறை காவலர் நவீந்திரன் என்ற சிறை காவலரை, வாட்ஸ் அப் கால் மூலமாக  தொடர்பு கொண்ட கவுதம், அவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவதாகவும், அதை சிறையில் உள்ள கைதிகளுக்கு கொடுத்து விடவும் எனக்கூறி உள்ளான். இது குறித்து நவீந்திரன் சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவே, மீண்டும் அவரை தொடர்பு கொண்ட கவுதம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறைத்துறையினர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

இந்நிலையில்  கடந்த மாதம் இதே போன்று கோபியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையின் முதன்மை தலைமை வார்டனாக உள்ள ராஜாராமிற்கு ஆயிரம் ரூபாயும்,சிறை காவலர் தனசேகருக்கு 500 ரூபாயும் கூகுள் பே மூலமாக வந்துள்ளது. அதைத்தொடர்ந்து இருவரும் அந்த பணத்தை சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததோடு, இதுகுறித்து புகாரும் கொடுத்து உள்ளனர். முதன்மை தலைமை வார்டனாக உள்ள ராஜாராம், கைதிகளுக்கு சட்டவிரோதமாக எவ்வித உதவியும் செய்ய மறுத்து வரும் நிலையில், அவர்களுக்கு அனுப்பபட்ட பணம் குறித்தும், இருவரும் சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவே ஆத்திரமடைந்த கவுதம், அவர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக, வீடியோ கால் முழுமையாக பதிவு செய்யப்படும் என்பதை அறிந்த கவுதமும், கவுரிசங்கரும் வீடியோ கால் மூலமாக பேசும் போது, ராஜாராமிற்கு பணம் அனுப்பி உள்ளதாகவும், அவர் தனக்கு வேண்டிய கைதிகளை நன்கு கவனித்துக்கொள்வார் என்று பேசி உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ முழுமையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று கவுதமும், கவுரிசங்கரும் பேசும் வீடியோ, இணையதளத்தில் வெளியானது.

<a href=https://youtube.com/embed/_1FqOGteMaY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/_1FqOGteMaY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

அதைத்தொடர்ந்து கோபி போலீசாரும், சிறைத்துறை அதிகாரிகளும் நடத்திய விசீரணையில் சிறை காவலர் ஒருவரே, பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வீடியோ வை பென் டிரைவ் மூலமாக காப்பி செய்து வெளியிட்டுள்ளது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சிறைத்துறையின் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணமான இரு குற்றவாளிகள் பேசும் வீடியோ கால் வெளியானது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.