×

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல்- நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு

 

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள், பாஜக MLA நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், Emergency Quota-வில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 8 ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மாநில பொருளாளர் சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். 4 கோடி ரூபாய் பண விவகாரத்தில், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் முருகன், முருகனின் பணியாளர்கள் ஜெய்சங்கர் ஆசைத்தம்பி ஆகியோரிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக பொருளாதார பிரிவு தலைவர் கோவர்த்தன் வீடு கடைகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில பொருளாளர் சேகர் மற்றும் முரளி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள், பாஜக MLA நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், Emergency Quota-வில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது