×

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்- அன்பில் மகேஷ் ஆலோசனை

 

சென்னையில் தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாட்டுக்கு அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. காரணம் “PM SHRI” பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக மத்திய அரசிடம் 15-03-2024ல் தமிழ்நாடு அரசு உறுதியளித்தது. ஆனால் தற்போது ஒப்புக்கொண்டபடி PM SHRI பள்ளிகளை நிறுவ தமிழக அரசு மறுப்பதாக குற்றம்சாட்டும் மத்திய அரசு அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை.

எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எஸ்.எஸ்.ஏ நிதி வழங்காத நிலையில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது எப்படி என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் தலைமைச் செயலாளருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.