மது விருந்துக்கு மாணவியை அழைத்த பேராசிரியர் கைது
Sep 14, 2024, 11:14 IST
நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் மாணவி ஒருவரை மது குடிக்க அழைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி. இக்கல்லூரியில் பணியாற்றும் செபாஸ்டியான் மற்றும் மற்றொரு பேராசிரியர் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மது அருந்த அழைத்துள்ளார். மேலும் மாணவிக்கு இரவில் செல்போனில் அழைத்து ஆபாசமாகப் பேசி தொல்லைக் கொடுத்துள்ளார். பேராசிரியர்களின் அத்துமீறல் தொடர்பாக மாணவி புகார் அளித்த நிலையில் பேராசிரியர் செபஸ்டியான் கைது செய்யபட்டுள்ளார். மாணவி அளித்த புகாரில் 2 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான பேராசிரியர் பால்ராஜை போலீசார் தேடிவருகின்றனர்.
இதனிடையே கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் இருவரை பணி நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.