×

அமரன் படத்திற்கு எதிர்ப்பு- கமல்ஹாசன் போட்டோவை ஆக்ரோஷமாக எரித்ததால் பரபரப்பு

 

திருவாரூரில் அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர், நடிகர் கமல்ஹாசனின் உருவப்படத்தினை எரித்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீபாவளி பண்டிகை அன்று சிவகார்த்திகேயனின் நடிப்பில் திரைக்கு வந்த அமரன் திரைப்படம். ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த நிலையில்  திரைப்படத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்த தவறான சித்தரிப்புகள் உள்ளதாக கூறி, இன்று திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு உள்ள திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அமரன் திரைப்படத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முற்றுகைப் போராட்டத்தின் போது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்தும்  கமல்ஹாசனின் உருவப்படத்தினை எரித்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.