×

பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்

 

அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும். புகார் கிடைத்ததில் இருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டும். கால அவகாசம் தேவைப்பட்டால் அதுகுறித்து மக்களிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.  மேலும் புகார் மனுக்களின் மீதான முன்னேற்றம் குறித்து  மாதம் தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.