×

ஒரு மணி நேர மழைக்கே வெள்ளக்காடான புதுக்கோட்டை- மக்கள் அவதி

 

ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய அடை மழையால் வெள்ளக்காடான புதுக்கோட்டை, ஜீவா நகர், உசிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

உசிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளிலும் சாலைகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகின்றனர். ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் புதுக்கோட்டையை தண்ணீரில் மிதக்கக்கூடிய நிலையில் கொட்டும் மழையிலும் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா இருசக்கர வாகனத்தில் சென்று பல்வேறு பகுதிகளை கொண்டார். அதேபோல் மாநகராட்சி ஊழியர்கள் அலுவலர்கள் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வடிப்பதற்கும் வரத்து கால்வாய் அடைத்துள்ள பகுதிகளில் வரத்து கால்வாயை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரியும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் வரத்து கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் புதுக்குளம் மர முத்து பணிகள் நடைபெறுவதால் அதற்கு செல்லக்கூடிய வரத்து கால்வாயை அடைத்து வைத்து புதுப்குளத்திற்கு நீர் செல்ல முடியாமல் தடுத்துள்ளதால் ‌ இதுவரை மழை நீரை சூழாத பகுதியில் கூட தற்போது ஒரு மணி நேரம் மழைக்கே மழை நீர் சூழ்ந்து வருவதாகவும் அதனால் அந்த வரத்து கால்வாயை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் மழை நீர் சூழ்ந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும் மழையால் சுவர் இடிந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.