×

மாவீரர் பூலித்தேவன் செய்த தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது - ஓபிஎஸ் 

 

மாவீரர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர  வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பூலித்தேவன்  நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது.

இந்திய மண்ணிற்காக, இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக அவர் செய்த தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது. என்று சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.