×

கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணா-  கிருஷ்ணசாமி கைது

 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்.


சென்னையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை கைது செய்ததை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட 3% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்த கிருஷ்ணசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.