×

ஆரணி அருகே 6 குழந்தைகள் உள்பட 7 பேரை கடித்து குதறிய வெறிநாய்

 

ஆரணி அருகே அடுத்தடுத்து 2 கிராமங்களில் வெறி பிடித்த நாய் திடிரென 7 குழந்தைகளை கடித்து குதறியது. படுகாயமடைந்த குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மகன் ஜீஸ்னு (7) 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் டியூசன் முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்லும் போது தெருவில் திரிந்து கொண்டிருந்த வெறி பிடித்த நாய் துரத்தி துரத்தி சிறுவனை கடித்துள்ளன. ஜீஸ்னு கதறலை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களை வருவதை கண்ட வெறிபிடித்த நாய் ஒட்டம் பிடித்துள்ளன. மேலும் பின்னர் வெறிபிடித்த நாய் சீனிவாசபுரம் கிராமத்தில் அடுத்துள்ள வடுகசாத்து கிராமத்தில் நுழைந்துள்ளன வீதியில் விளையாடி கொண்டிருந்த அக்சயா(4) ராஜாஸ்ரீ(7) யுவஸ்ரீபிரியா(15) உள்ளிட்ட 6 குழந்தைகளை வெறிநாய் கடித்து குதறியது.

இதில் படுகாயமடைந்த 7 குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் நாய் தொல்லை அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நாய் பிடித்து கருத்தடை செய்ய கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அருகே அடுத்தடுத்து 2 கிராமங்களில் 7 குழந்தைகளை வெறி நாய் கடித்த குதறிய சம்பவம் கிராம பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.